செய்திகள் இந்தியா
பெண்கள் என்னைப்போல் ஏதும் அணியாமல் வந்திருந்தாலும் அழகு தான்; ராம் தேவ் பாபாவின் ஆபாச பேச்சிற்கு வலுக்கும் எதிர்ப்பு
புனே:
பெண்கள் ஆடை பற்றி பாபா ராம்தேவ் பேசிய கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. அருவருக்கத்தக்க கருத்தை கூறிய ராம்தேவ் நாட்டிலுள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்நவிஸ். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது பேசிய ராம்தேவ், "கூட்டத்திற்கு வருகை தந்துள்ள பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு எல்லா நன்மையும் சேரட்டும். சேலை அணிந்து வந்தவர்களுக்கு முதல் வரிசையில் அமர வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலர் சல்வாரில் வந்துள்ளீர்கள். சிலர் வீடுகளில் இருந்து சேலை கொண்டுவந்தும் கூட மாற்ற நேரமில்லாததால் சல்வாரில் இருக்கிறீர்கள்.
"நீங்கள் சேலை அணிந்திருந்தாலும் அழகு. அம்ருதாவை போல் சல்வார் அணிந்திருந்தாலும் அழகு. இல்லை என்னைப் போல் ஏதும் அணியாமல் இருந்தாலும் கூட அழகுதான்" என்றார்.
அவருடைய இந்தப் பேச்சைக் கேட்டு கூட்டத்திலிருந்த பெண்கள் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில், ராம்தேவ் "சமூக கோட்பாடுகளுக்காகத் தான் ஆடை அணிகிறோம். 10 வயது வரை நாம் ஏதும் அணியாமல் சுற்றியிருக்கிறோம் தானே. இந்தக் கால குழந்தைகள் தான் ஐந்தடுக்கில் ஆடை அணிகின்றனர்" என்றார்.
இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், "ஸ்வாமி ராம்தேவ் துணை முதல்வர் மனைவியின் முன்னால் பெண்களை இழிவாகப் பேசியது கண்டனத்துக்குரியது. வீடியோவைக் காணும் அவர் கருத்தால் எல்லா பெண்களும் வேதனையடைந்தது தெரிகிறது. அவர் நாட்டுப் பெண்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்" என்று கோரியுள்ளார்.
திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா, "டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து பதஞ்சலி பாபா ஏன் பெண்கள் ஆடையணிந்து ஓடினார் என்பது புரிந்துவிட்டது. அவருக்கு சேலையும், சல்வாரும் தான் இஷ்டமென்று சொல்லியிருக்கிறார். அவருக்கு பார்வை கோளாறு இருக்கிறது. அதனால் அவரது கருத்துகள் இப்படி இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
