நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

'அவதார்'வீடியோ கேம் புதிய அவதாரம்; 'மேரியோ'வீடியோ விளையாட்டும் டிஜிட்டல் முறையில் தயாரிப்பு: பிரான்ஸில் டிஜிட்டல் விளையாட்டு விழா

வாஷிங்டன் :

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எண்ணத்தில் உருவாகி உலகமெங்கும் புகழ்பெற்ற திரைப்படம் அவதார்.

இந்தக் கதையினை அடிப்படையாக கொண்டு பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய டிஜிட்டல் விளையாட்டின் முன்னோட்டம் அமெரிக்காவில் வெளியாகி உள்ளது.

2009ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அவதார். இதையடுத்து அவதார் திரைப்படத்தின் 2ஆவது பாகத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கி வருகிறார்.

அவதார் 2 திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அவதார் படத்தின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யூபிஐ சாப்ட் நிறுவனம் கணினி விளையாட்டு ஒன்றை வடிவமைத்து உள்ளது.

Avatar: Frontiers of Pandora என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த கணினி விளையாட்டின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திரளான இளைஞர்கள் ஆர்வத்துடன் வீடியோ விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர். கற்பனை உலகம் ஒன்றில் கதாநாயகன் தீய சக்திகளை எதிர்த்து தனது சமூகத்துடன் போராடும் சாகசங்கள் நிறைந்த காட்சிகளை இந்த விளையாட்டு கொண்டுள்ளது.

இந்த விளையாட்டு பயன்பாட்டிற்கு தயாராக இருந்தாலும் வர்த்தக ரீதியில் வெளியாக இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று யூபிஏ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நிகழ்ச்சியில் கணினி பயன்பாட்டின் தொடக்கக் காலத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கட்டிப் போட்டு இருந்த மேரியோ விளையாட்டின் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் விளையாட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஆர்பிஎம் அரங்கில் கடந்த 12ம் தேதி தொடங்கிய இ3 டிஜிட்டல் விளையாட்டு திருவிழாவில் புதிய வீடியோ விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் நடிகர்கள் இல்லாமல் முற்றிலும் டிஜிட்டல் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாகசப் படங்களும் திரையிடப்படுகின்றன.  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset