நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பர்ட் நகரங்களுக்கு ஏர்இந்தியா சேவை

மும்பை:  

ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பூட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது.

தில்லியில் இருந்து கோபன்ஹேகன், மிலன் மற்றும் வியன்னாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவதாகவும், புதிதாக விமானங்களை குத்தகைக்கு வாங்கி அதன் மூலம் இந்த சேவை அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வாரத்துக்கு 47 விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

தில்லி-மிலன் வழிதடத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்களும் ,தில்லி-வியின்னா மற்றும் தில்லி- கோபன்ஹேகன் இடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்கள் இயக்கப்படும்.

அடுத்த காலாண்டில் மும்பையிலிருந்து பாரிஸுக்கு வாரம் 3 முறையும், மற்றும் ப்ராங்பட் நகருக்கு வாரம் 4 முறையும் புது விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset