நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 10ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்

கோலாலம்பூர்:

மலேசியாவின் 10ஆவது பிரதமராக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை சரியாக 5.00 மணிக்கு பதவியேற்றார். 

இஸ்தானா நெகாராவில் பேரரசர்,  அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அன்வார் இப்ராஹிமுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று காலை மலாய் ஆட்சியாளர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து அன்வாரை பிரதமராக நியமிக்க பேரரசர் முடிவு செய்தார்.

முதலில் PHகூட்டணியும் Perikatan Nasionalம் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்குமாறு பேரரசர் கேட்டுக் கொண்டார். 

ஆனால், பக்காத்தான் ஹரப்பானுடம்  இணைந்து செயல்பட முடியாது என்று  தேசியக் கூட்டணித் தலைவரான முஹைதீன் யாசின் அந்த யோசனையை நிராகரித்தார்.

கபுங்கன் பார்ட்டி சரவாக் , கபுங்கன் ரக்யாட் சபா ஆகியோர் முஹைதீனை பிரதமராக ஆதரிப்பதாக கூறிய போதிலும், அந்த இரு  கட்சிகளும் இறுதியில் பேரரசரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கான விருப்பத்தைப் பின்பற்றுவதாகக் கூறின.

அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற பின் கோலாலம்பூர் முஃப்தி பேரரசர் அவையில் பிரார்த்தனை - துவா - செய்தார்.

பதவியேற்பு நிகழ்வில் அன்வாரின் துணைவி டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் உடன் இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset