நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி கோஸ்டா ரிகாவை 7-0 என வீழ்த்திய ஸ்பெயின்

டோஹா:

22ஆவது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. 

இந்தத் தொடரில் குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின. 

ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் டேனி ஆல்மோ ஒரு கோலும், 21ஆவது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ ஒரு கோலும், 31ஆவது நிமிடத்தில் பெரா டாரஸ் ஒரு கோலும் அடித்தனர். 

இதனால் முதல் பாதி ஆட்டம் 3-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரா டாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 74ஆவது நிமிடத்தில் காவியும், 90ஆவது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 92ஆவதுநிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்தனர். 

கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 7-0 என அபார வெற்றி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset