நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் பிரதமரா?: ஹிஷாமுடின் மறுப்பு

கோலாலம்பூர்:

நாட்டின் 10ஆவது பிரமராக நான் பொறுப்பேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது என வெளிவந்துள்ள செய்தியை டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் மறுத்துள்ளார்.

தேசியக் கூட்டணியின் கீழ் ஒற்றுமை அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதில் பிரதமராகும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது என்று ஒரு வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

தேசிய கூட்டணி, நம்பிக்கை கூட்டணி என இரு தரப்பினரிடமும் நான் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.

எனக்கு பொறுப்பு வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே, இது முற்றிலும் பொய்யான தகவலாகும். இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset