நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் தீ விபத்து: 38 பேர் பலி

பெய்ஜிங்:

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் பலியாகினர்.

அன்யாங் நகரில் அமைந்துள்ள ஆயத்த ஆடை ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படையினர் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியாகினர்; 2 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும்.

வெல்டிங் பணியின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதியில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset