நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவுடன்  ஆஸ்திரேலியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:

புது டெல்லி:

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவின் ஜவுளி, தோல், வீட்டு வசதிப் பொருள்கள், ஆபரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட துறைகளின் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருள்களுக்கு ஆஸ்திரேலிய சந்தையில் வரி விதிப்பு இருக்காது.

ஏஐஇசிடிஏ ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில் "இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு எங்கள் நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது' எனத்  தெரிவித்தார்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டு அமைச்சரவையிடம் இருந்து இதற்கான ஒப்புதலைப் பெறும், இந்தியாவிலும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.

விதிகள் மற்றும் வரிகள் தொடர்பானவை இறுதி செய்து, முன்கூட்டியே இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset