நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொலைக்காட்சி நெறி்யாளரின் கட்சி வெற்றி

காத்மாண்டு:

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தொலைக்காட்சி நெறியாளர் ரவி லாமிசானேவால் தொடக்கப்பட்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆர்எஸ்பி), எதிர்பார்த்தைவிட அதிக  இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

புதிய அரசு அமைவதில் அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேபாளத்தில் 275 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் நேபாள காங்கிரஸ் முதலிடத்திலும், சிபிஎன் - யுஎம்எல் கட்சி இரண்டாம் இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி மூன்றாம் இடமும் வகிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset