நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய நடைமுறை

புது டெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்வதை ரத்து செய்து புதிய நடைமுறையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நடைமுறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

விமான நிலையத்தில் பரிசோதனையின்போது கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இந்தியா வந்த பின், தங்கள் உடல்நிலையை பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஒருவேளை கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்ல வேண்டும் அல்லது தேசிய உதவி எண் (1075), மாநில உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset