நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெலங்கானா எம்எல்ஏக்களை வாங்க பாஜக பேரம்: தேசிய பொதுச் செயலருக்கு போலீஸ் சம்மன்

பெங்களூரு:

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளர்  பி.எஸ்.சந்தோஷுக்கு தெலங்கானா போலீஸ் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடுமாறு கூறி, ரோஹித் ரெட்டி உள்பட 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை அணுகியதாக போலீஸாரிடம் ரோஹித் ரெட்டி அளித்த புகாரில், டிஆர்எஸ்இல் இருந்து விலகி, பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தெலங்கானா காவல் துறையினர், ராமச்சந்திர பாரதி (எ) சதீஷ் சர்மா, நந்த குமார், சிமயாஜி சுவாமி ஆகிய மூவரை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எஸ்.சந்தோஷுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக தவறினால், கைது செய்ய நேரிடும்' என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset