நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

நியூயார்க்:

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபை முழு அமர்வு கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.

அதற்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபை கூட்டப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு -காஷ்மீர் குறித்த தேவையற்ற குறிப்புகளை மீண்டும் இங்கு எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதிநிதி எதை நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது என்பதை அவருக்கு மீண்டும் தெரிவிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset