நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியா ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்ய ரஷிய வங்கிகளில் கணக்குகள் தொடக்கம்

புது டெல்லி:

இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்யும் வகையில் 9 ரஷிய வங்கிகளுடன் இந்திய வங்கிகள் கணக்குகளைத் தொடங்கி உள்ளன.

வோஸ்ட்ரோ எனும் இந்த வங்கிக் கணக்குகள் ரஷியாவின் மிகப் பெரிய வங்கிகளான ஸ்பர்பேங்க், விடிபி பேங்க் ஆகிய வங்கிகளில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

ரஷ்யாவின் "காஸ்பரோம்' வங்கிக்கு இந்தியாவில் கிளை இல்லாத காரணத்தால் கொல்கத்தா யூகோ வங்கியில் இந்த வோஸ்ட்ரோ கணக்கை தொடங்கி உள்ளது.

இதேபோல், 6 ரஷிய வங்கிகள் இந்தியாவின் இண்டஸ்இண்ட் பேங்கில் 6 வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்கி உள்ளன.

இதன் மூலம் ரஷியாவுடன் நடைபெறும் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் செலுத்த முடியும். இந்திய ரூபாயிலான சர்வதேச வர்த்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset