நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான்

மும்பை:

துபையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்க வரித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்..

இதுகுறித்து விமானத் துறை அதிகாரிகள் கூறுகையில்,

துபையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஷாருக்கான் அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களின் பைகளை சோதனையிட்டபோது ரூ.17.86 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் இருந்தன. இதற்கு ரூ.6.88 லட்சம் சுங்க வரி கட்ட வேண்டும் என்பதாலும், இதற்கான கட்டணம் செலுத்தும் மையம் அதிகாலையில்தான் திறக்கப்படும் என்பதாலும் ஷாருக்கான், அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஷாருக்கான் மட்டும் செல்வதற்கு சுங்க வரித் துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.

அதிகாலையில் சுங்க வரி கட்டணம் செலுத்தும் மையம் திறக்கப்பட்டவுடன், ஷாருக்கானின் பாதுகாவலர் ரூ.6.88 லட்சத்தைக் கட்டிவிட்டு வெளியே சென்றார்' என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset