நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள்!  - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் 

பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள் Think outside the box என்ற  சுலோகம் இப்போது பிரசித்திப் பெற்று வருகிறது. பெட்டிக்குள் என்ன இருக்கின்றது என்பதைப் பற்றியே யோசிப்பதைத் தவிர்த்து வெளியே என்ன இருக்கின்றது என்பது பற்றிய கவனத்தைத் திருப்ப இந்த அறைகூவல் தூண்டுகிறது.

இந்த முயற்சியில் இறங்கி வெற்றி பெற சில யுக்திகள்.

ஒன்று : 

மென்பொருள் விளையாட்டுக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மூளைத் திறமைசாலிகள் தங்களின் உருவாக்கத் திறமை நலிந்து வருவதை உணர்ந்தனர். விற்பனை சரிந்து வரும்போது, ஒரு யுக்தியைக் கையாண்டனர். "வாடிக்கையாளர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன" என்ற விளம்பரமும் தொடர் முறைகளும் சொல்லொணா தகவல்களைக் கொண்டு வந்து சேர்ந்தது. 

"நாம் ஏன் இதை நினைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தும் பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்பும் உருவாக்க யோசனைகளும் வியாபாரத்திற்கு புதிய யுக்திகளைக் கொடுத்து விற்பனையை வளர்த்தது".

இரண்டு: 

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இறங்கிய இருவரில் ஒருவரின் வாகனம் ஸ்டார்ட் ஆகவே இல்லை. மற்றொருவரின் வாகனம் மக்கர் ஆகி இடையிலே நின்றுவிட்டது. முன்னவர் பைக்கைத் தன்ளிக் கொண்டே இறுதி  எல்லையை அடைந்தார்.  பின்னவரும் வேறுவழி இல்லாமல் பின்தொடர்ந்தார். பைக் ஓடவில்லை என்று போட்டியிலிருந்து விலகாமல் நடையிலேயே தொடர்ந்தது நொடிச் சிந்தனை      

மூன்று  : 

உயர அளவு தெரியாமல் சுரங்கப் பாதையில் நுழைந்த லாரி மேல் வளைவில் சிக்கிக்  கொண்டது  முன்னாலேயும் போக முடியவில்லை பின்னாலேயும் நகரமுடியவில்லை. செங்கற்களைபிரித்து குகையின் வளைவையே அகலப்படுத்தினால்தான் வாகனத்தை எடுக்க முடியுமென்று ஏற்பாடுகள் நடந்தன. அது  ஒரு பொறியியல் கண்கொண்டு பார்க்கப்பட்ட தீர்வு.

ஆனால், லாரியின் டயர்களின் காற்றை வெளியேற்றினால் லாரியின் உயரம் குறையும் என்ற  சமயோசித அறிவு அதிக சிரமமில்லால் தீர்வாகி லாரியும் வெளியேறியது.

எனவே நான்கு சுவர்களுக்குள் நடப்பதை மட்டும் கவனிப்பதுடன் அதற்கு வெளியே என்ன விளைவுகள், தாக்கங்கள் உள்ளன என்பதை உற்று நோக்கினால் புதிய தீர்வுகள் கிடைக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset