செய்திகள் சிகரம் தொடு
இலங்கையில் பஸ் ட்ரைவராக இருந்தவர் இன்று கோலியின் அருகில் உலகக்கோப்பையுடன்! யார் இவர்?
புது டெல்லி:
நுவான் செனவிரத்ன, இலங்கையில் இரண்டு முதல்தர போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர். அதற்குமேல் கிரிக்கெட்டில் வாய்ப்பு இல்லாத நிலையில் வாழ்க்கையை கொண்டு நடத்த கூட பணம் இல்லாததால், பாடசாலை சேவை பஸ் ஓட்டுனராக மாறினார்.
அப்போது அவருக்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீச்சு பயிற்சியின் போது side arm முலம் பந்து வீச்சு பயிற்சி வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. சைட் ஆர்ம் என்பது கரண்டி போல இருக்கும் உபகரணம் அதில் பந்தை வைத்து வேகமாக வீசுவார்கள்.
நுவான் முதன் முதலில் இலங்கை ஏ அணிக்கு அந்த பயிற்சியை வழங்கினார். அதன் பின் அவர் உலகிலேயே மிக வேகமாக வீசக்கூடிய., அதாவது ஒரு மெசின் வீசக்கூடிய அளவு வீசக்கூடிய வீரர் என்பதை அறிந்த இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளர் அவரை தேசிய அணி வீரர்களுக்கு பந்து வீச சில வாய்பபுக்களைக் கொடுத்தார். ஆனால் இலங்கை தேசிய அணி வீரர்கள் அவர் மிக வேகமாக பந்தை சைட் ஆர்ம் மூலம் வீசுவது தங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம் என்று முறையிட்டதால் அவருக்கு தேசிய அணிக்கு பந்து வீசி பயிற்ச்சி வழங்க நிரந்தர வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அப்போதுதான் இவர்பற்றி விராட் கோலி கேள்விப்பட்டு, விராட் கோலியின் விசேட கோரிக்கையின் அடிப்படையில் இந்திய அணிக்கு பயிற்சி வழங்கும் அணியில் நிரந்தர இடம் கிடைக்கிறது.
இந்தியா சென்றவர், விராட் கோலிக்கு மிக வேகமாக பந்து வீசலாமா? அதனால் தனது வேலைக்கு பாதிப்பு வரலாமோ என்று யோசிக்கிறார். அப்போது கோலி,
" உன்னை நாங்கள் எடுத்தது அந்த வேகமான பந்துகளை வீச வேண்டும் என்பதற்காகவே, யோசிக்காமல் வீசு " என்கிறார்.
அதன்பின் விராட் கோஹ்லியின் வலை பயிற்சியின் போது ஆஸ்த்தான சைட் ஆர்ம் பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறிப்போகிறார் நுவான்.
நுவான் உள்ளிட்ட அணியினர் தனது துடுப்பாட்டம் மேம்பட எந்தளவு முக்கியமானவர்கள் என விராட் கோலி பேசும் வீடியோ யூ டியூப்பில் உள்ளது. Throwdown session of virat என தேடிப்பாருங்கள். விராட் நுவான் பற்றி சொல்லும் போது "நுவான் இலங்கையர் என்றாலும் , இப்போது இந்தியர் போல் ஆகிவிட்டார்" என்கிறார்.
இலங்கை அணியால் புறக்கணிக்கப்பட்டவரை இந்திய அணி குறிப்பாக கோலி உள்வாங்கி இன்று உலகத்தில் உள்ள சிறந்த ஒரு throwdown specialist ஆக அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரைப் பயன்படுத்தி தங்கள் துடுப்பாட்ட திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:09 pm
70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
March 20, 2023, 11:31 am
படமும் அழகு! அது தருகின்ற செய்தியும் அழகு!
November 26, 2022, 10:26 am
எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
November 6, 2022, 11:02 am
பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
October 23, 2022, 12:02 pm