செய்திகள் சிகரம் தொடு
Boris P Stoicheff Award வென்ற ஆசிய நாடுகளின் முதல் ஒளியியல் ஆய்வாளர் ஹஸ்னா ஜஹான்
திருமணம் முடிந்து இரு குழந்தைக்கு
தாயான பிறகும் தான் விரும்பிய
துறையில் சாதிக்கலாம் என்பதற்கு
ஹஸ்னா ஜஹான் ஓர் உதாரணம்...
மலப்புறம் மாவட்டம் இலங்குளவம் கிராமத்தில் முகமது கோயா - ஆபிதா தம்பதியர் மகள் ஹஸ்னா ஜஹான்..
கல்லூரியில் இயற்பியல் முதுகலை
படிப்புகளுக்கு பின் கோழிக்கோடு NIT
National Institute of Technology மாணவி.
OPTICAL PHYSICS துறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..
அமெரிக்க டெல்லாசில் வைத்து
OPTICA Foundation Of America, CANADIAN Association Of Physicist Foundation இணைந்து நடத்திய உலகப்புகழ் பெற்ற ஒளியியல் விஞ்ஞானி "Boris P Stroichef" நினைவு
Frontiers in Optical Intl. Conference இல் கலந்துகொண்டவர் ஹஸ்னா ஜஹான்.
உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளியியல் ஆய்வு மாணவர்கள் நூறு பேர் கலந்து கொண்ட சர்வதேச அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற ஒரே இந்திய மாணவர் ஹஸ்னா ஜஹான் சமர்பித்த ஆய்வு கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு 2025ம் ஆண்டுக்கான "Boris P Stoicheff Award" ம், 3000 டாலர் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
OPTICS Research ஊக்குவிக்க வழங்கும் இந்த சர்வதேச விருது பெறும் முதல் இந்தியர் மட்டுமல்ல ஆசிய நாடுகளின் முதல் ஒளியியல் ஆய்வாளரும் இவரே.
கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற Optics Emerging Economy கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரை சமர்பித்து விருது பெற்ற ஹஸ்னா ஜஹான் மேற்படிப்பு முயற்சிகளில் அவரது கணவர் இர்ஷாத் ஜஹானின் பெருந்துணையாக இருக்கிறார்.
சமூகத்திற்கு பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.
- குளச்சல் அஜீம்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 7:47 am
இப்படியும் ஒரு மேற்படிப்பு - சாதித்த தியானா நதீரா
January 25, 2025, 8:58 am
தோற்கும் போதெல்லாம் என் வாழ்வை எண்ணிப் பாருங்கள்: Muneeba Mazari
January 10, 2025, 2:10 pm
கூரையில்லாத பள்ளியில் தமிழ்வழியில் கற்று இஸ்ரோ தலைவராக உயர்ந்த நாராயணன்
January 4, 2025, 10:17 pm
கிரிக்கெட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற Brad Hogg
September 20, 2024, 7:09 pm
70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?
July 3, 2024, 8:18 pm
இலங்கையில் பஸ் ட்ரைவராக இருந்தவர் இன்று கோலியின் அருகில் உலகக்கோப்பையுடன்! யார் இவர்?
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
