நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?

கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்...
தேசிய நெடுஞ்சாலையில்...

நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...

பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது. ஹெட் லைட் வெளிச்சம் அடித்து காட்டுகிறார்.

ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.

ஒரு விலையுயர்ந்த காரில்...

இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!

அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!

வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.

அவரும் உயர்த்தியிருப்பார் போல...!

இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!

சளைத்தவரா நீங்கள்...?

வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.

அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.

நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.

இப்படியே போனால்.....

முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இந்நிலையில்....

உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!

இப்போது.....

உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!

நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...

பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...

இப்போதோ...

ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...

கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!

தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி...

அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...

தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...

பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!

உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்!

நாமே ஓட்ட வேண்டும்!

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்!

அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை...

நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...

நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...

எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!

- ரமணி ரமா

தொடர்புடைய செய்திகள்

+ - reset