நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

நம்மிடமிருந்து பறிக்க முடியாதது நம்பிக்கை மட்டுமே

நாசி காலகட்டத்திலுள்ள ஜெர்மனி அகதிகள் முகாமில் பல கொடுமைகள் அரங்கேறின.

மக்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்
கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டே இருந்தனர்.

மக்கள் துன்ப படுக்கின்ற காட்சிகளை காணுவது ஒரு பெரிய கொடுமையாக இருந்தது. அங்கு உள்ள மக்களால் அந்த கொடுமையிலிருந்து மீண்டு வர இயலாத நிலை இருந்தது.

 அந்த அகதிகள் முகாமில் விக்டர் ஃபிராங்லின் என்ற ஒரு நரம்பியல் மருத்துவர், உளவியல் நிபுணர் ஒருவர் இருந்தார்.

அவரின் கண் முன்பே அவருடைய மனைவி மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்து போனார். 

அங்குள்ள ஒவ்வொருவரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் போது எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விக்டர் ஃபிரான்க்லின் பார்க்க ஆரம்பித்தார்.

அவர் பல பணிகளை மேற்கொண்டார். அவர் பார்த்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரு புத்தக வடிவில் அமைத்தார்.அந்த புத்தகத்தின் பெயர்
(Man's Search for Meaning) அந்தப் புத்தகம் மிகவும் பிரபலம் அடைந்தது. 

கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையானது.
அங்கிருந்த ஒருவர் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் விக்டர் ஃபரான்க்லின் கூட எதிர்ப்பார்க்க வில்லை.

இந்த நிகழ்வின் படிப்பினை என்னவென்றால் நம்பிக்கை தான் மனிதனின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

அங்கிருந்த அகதிகள் முகாம் ஒன்றும் மனிதர்கள் தனிமைப்படுத்தப்படும் முகாம் அல்ல (Isolation Camp) அல்ல Quarantine Camp போல அல்ல.
நமது சகோதரர்கள் வாழும் லேபர் கேம்ப் போல அல்ல. மாறாக அது ஒரு வித்தியாசமான சோதனைகள் நிறைந்த இடமாக இருந்தது.
கொடுமையான சூழலாக மட்டுமே அங்கு இருந்தது.

அத்தகைய கொடுமையான சூழலில் கூட விக்டர் ஃபரான்க்லினிற்கு ஒரு நம்பிக்கை இருந்தது. 
நாம் சிக்கிக் கொண்டாலும்  நம்மிடம் நம்பிக்கை இருந்தால் அதை எதிர்த்து வென்று வர முடியும் என்று.

விக்டர் ஃபரான்க்லின் கூறுகிறார்,
 மனிதனுக்கு ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு சித்தாந்தம் (Ideology) இருக்க வேண்டும்.
இவை இல்லாவிட்டால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. 
இதைதான் அவர் தன்னுடைய புத்தகத்திற்கு பெயர் சூட்டியுள்ளார்.
மக்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்  பல கொடுமைகள் அனுபவித்து கொண்டு இருந்தார்கள்.
அங்கிருந்த மக்கள் நம்பிக்கையை இழந்து மடிந்து கொண்டே இருந்தார்கள்.

 விக்டர் ஃபரான்க்லின் மக்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் தொடர்ந்து ஊட்டினார்.
"உங்களை தான் அவர்கள் துன்புறுத்த முடியும் ஆனால் உங்கள் கனவுகளை அவர்களால் தகர்க்க முடியாது.

உங்கள் லட்சியத்தை அவர்களால் அழிக்க முடியாது.

இந்த முகாமிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்ற பிறகு உங்களால் நிறைய சாதிக்க முடியும். நம்புங்கள்,
தைரியமாக இருங்கள்." என்று தொடர்ந்து நம்பிக்கை ஊட்டினார். உலகத்தைப் பற்றிய கனவுகளை காண வைத்தார். 

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அப்போது ஜெர்மனி தோல்வி அடைந்தது.

முகாமில் இருந்த அகதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு லட்சியம் இல்லாவிட்டால் வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமே இல்லை.

- எஸ். அமீனுல் ஹஸன்
அகில இந்திய துணைத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

தமிழில்: ஜொஹரா சுல்தான்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset