நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

இரண்டாயிரம் வருடப் பழைமையான கணிதச் சமன்பாடு ஒன்றுக்குத் தீர்வு கண்டு நிரூபித்திருக்கிறார்கள் இரு மாணவிகள்

இரண்டாயிரம் வருடப் பழைமையான கணிதச் சமன்பாடு ஒன்றுக்குத் தீர்வு கண்டு நிரூபித்திருக்கிறார்கள் இரு மாணவர்கள். நியூஆர்லியன்ஸ் புனித மேரி அகாடமி மாணவர்களான கால்சியா ஜான்சன், நெகியா ஜாக்சன் செய்த இந்த அருஞ்செயலைக் கணிதவியலாளர்கள் பாராட்டிப் புகழ்கிறார்கள்.

பிதாகரஸ் தேற்றம் நினைவிருக்கிறதா? ஒருவர் தன் காதலை நிரூபிப்பதை விட A^2 + B^2 = C^2. என்று நிரூபிக்க அதிகம் மெனக்கெட்டிருப்பார். இந்த வடிவவியல் (Geometry) சமன்பாட்டை முக்கோணவியலில் (trigonometry) நிரூபிப்பது சாத்தியமில்லையாம். 

கணிதப் போட்டி ஒன்றில் முக்கோணவியலில் இதை நிரூபிக்கும்படி கால்சியாவுக்கும் நெகியாவுக்கும் சொல்லப்பட்டது. கிறித்துமஸ் விடுமுறையில் இந்த இரு மாணவிகளும் முயன்று தீர்வினைக் கண்டுள்ளார்கள். இரண்டாயிரம் வருடங்களாகச் சாத்தியமில்லை என்று நம்பப்பட்ட விஷயத்துக்குத் தீர்வு கண்டு சாதித்துள்ளனர். அந்தப் போட்டியில் 500 அமெரிக்க டாலர்கள் பரிசும் வென்றனர். இருவருக்கும் கணிதத்தில் மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் இல்லை. தற்போது, நெகியா மருத்துவத்துறை சார்ந்தும், கால்சியா சூழல் பொறியியல் தொடர்பாகவும் படிக்கிறார்கள்.

பின்னர் சமூகவலைத்தளங்களில் இந்தச் செய்தி பிரபலமாகி இது தவறென்று சில எதிர்மறைக் கருத்துகளும் வந்தன. ஆனால் கணிதவியலாளர்கள், . “சந்தேகமின்றி கொண்டாடத் தகுதியான வெற்றி” என்று அங்கீகரித்துள்ளார்கள். லூசியானா ஆளுநர், நியூஆர்லியன்ஸ் நகரத்திற்கான ஸிம்பாலிக் சாவியைக் கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

- கோகிலா பாபு

#Woman #பெண்

தொடர்புடைய செய்திகள்

+ - reset