நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

மலையேறும் ஆடு இயற்பியல் விதிகளை மீறும் ஓர் உயிரினம்: வெள்ளிச் சிந்தனை

மலை ஆடு எப்போதுமே இயற்பியல் விதிகளை மீறும் ஓர் உயிரினம். வியக்கத்தக்க வகையில் இயற்கையுடன் அது விளையாடுகிறது.

இந்த அற்புதமான உயிரினம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 முதல் 4,500 மீட்டர் வரை உயரத்தில் வாழும்.

கடுமையான இயற்கை, வேகமான காற்று, கூர்மையான பாறைகள் என சூழல் எவ்வளவுதான் ஆபத்தாக இருந்தாலும், தட்டையான தரையைப் போன்று கரடுமுரடான சரிவுகளில் அது தன் வழியைக் கண்டுபிடிக்கிறது.

இதனால் வேட்டை மிருகங்கள் கூட அதைத் துரத்தத் துணிவதில்லை. மலை உச்சிகள்தான் அந்த ஆடுகளின் ஆடுகளம்.

100 கிலோ வரை எடை இருந்தாலும் திறமையாக மலை மீது ஏறும். அதன் உடல் வாக்கும் தசைகளும் எளிதாக மேல்நோக்கி ஏற உதவுகிறது.

அதன் அசாதாரண திறனின் ரகசியம் அதன் குளம்புகளில் உள்ளது. அவை பிளவுபட்டவை, நெகிழ்வானவை. ஒவ்வொரு குளம்பின் மையத்திலும் ஒரு மென்மையான திண்டு இருக்கும். பாறைகளில் உறுதியான பிடியை இது வழங்கும். 

அதேவேளை குளம்புகளின் விளிம்புகள் கடினமாக இருக்கும். இதனால் கூர்மையான மலை விளிம்புகளிலும், செங்குத்தான பாறைகளிலும் புவியீர்ப்பு விசையை மீறி வியக்கத்தக்க வகையில் பாதுகாப்பாக நிற்கும்.

இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். என்னவென்றால்...

குதிக்கும்போது சமநிலையை இழந்தால் மலையாடு பின்வாங்குவதில்லை. இன்னும் வேகமாக.. இன்னும் முழு பலத்துடன்.. குதித்து உயரத்தை அடையும்.

அந்தக் காட்சி நமக்குத்தான் ஆபத்தாகவும் சாத்தியமற்றதாகவும் தோன்றுகிறது. ஆனால் மலையாடுகளுக்கு அவ்வாறு குதிப்பது; மேகங்கள், பாறைகளுக்கு இடையே அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண பொழுது போக்கு.

தடைகளை தாண்டுவதில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது. என்ன சொல்கிறீர்கள்...?

மலை ஆடுகள் நமக்கு பெரும் பாடத்தைக் கற்றுத்தருகின்றன.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset