நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணமா?

நியூயார்க்: 

சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை உலகப் பணக்காரரான எலான் மஸ்க், ரூ.3.61 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் டுவிட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக, டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்படுள்ளதாகத் தெரிகிறது.

'டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மைதன்மை, தரத்தை மதிப்பீடு செய்ய புதியதாக ஒரு மதிப்பீட்டுக் குழு அமைக்கவுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset