
செய்திகள் தொழில்நுட்பம்
8 மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது
கலிஃபோர்னியா:
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது. இதைத் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பலர் டுவிட்டர் வலைத்தள்ளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.
தங்களது கணக்குகள் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்குச் செய்தி வந்ததாக நேற்று புகார் அளித்தனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் கூறினர்.
இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளதகவும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்றும் அதை சரி செய்து விட்டதாகவும் தன்னுடைய டுவிட்டர் அகப்பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே உலகளவில் ஏறத்தாழ 8 மணி நேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் சேவை 3 மணி நேரம் முடங்கியது நினைவிருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm