நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பெண்டுலம்- சைக்காலஜிக்கல் த்ரில்லர்

பெண்டுலம்- சைக்காலஜிக்கல் த்ரில்லர்

நிலையற்ற வாழ்வுதனை குறியீடாகக் கொண்டு நிலைத்து நிற்கும் காலம் பற்றி சொல்லும் சைக்காலஜிக்கல் திரில்லர் தமிழ் படம் பெண்டுலம். 

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து புதுமைகளை எப்பொழுதும் போற்றுகின்ற விஜய்சேதுபதி தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் வீச்சு பரவலாக எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளது.

பெண்டுலம் திரைப்படத்தின் இயக்குனர் பி. சதீஷ்குமரன் இயக்குனர் ஷங்கரின் ஐ. திரைப்படத்தில் மேக்கிங் கேமரா மேன் ஆக பணியாற்றியவர். 

இவர் ஒளிப்பதிவு செய்த அகம் திமிரி என்கிற குறும்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்த மிக முக்கியமான ஒரு குறும்படமாகும். 

அவர் முதன் முறையாக இயக்கும் இந்தத் திரைப்படம் மனோதத்துவம் சார்ந்த ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். 

இத்திரைப்படத்தை திரவியம் பாலா தயாரிக்கிறார்.

பெண்டுலம் திரைப்படம் தமிழில் புதுமையை நேசிக்கும் தமிழ் திரைப்பட ரசிகனுக்கும் எல்லா வகையான கமர்சியல் அம்சங்கள் கலந்த புதுமையான ஒரு படைப்பாக விரைவில் திரைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset