நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

கையாடல், களவுகளைக் குறைக்க உள்கட்டுப்பாடு, ஒழுங்கு அவசியம்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

வர வேண்டிய இடத்திற்கு சரக்கு வரவில்லை. செல்ல வேண்டிய இலக்கிற்கு பொருட்கள் சென்று சேரவில்லை. விற்ற பணம் கல்லாவிற்கு வரவில்லை. வசூல் செய்யப்பட்ட பணம் வங்கியில் போடப்படவில்லை. 

இப்படி எத்தனையோ வில்லங்கங்கள் வியாபாரத்தில் ஏற்படும். நம்பிக்கையும் நாணயமும் முக்கியம் என்று எவ்வளவுதான் வற்புறுத்தி வந்தாலும் அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று பிரச்னைகள் வியாபாரத்தில் இருந்து கொண்டேதான் இருக்கும். 

எவ்வளவுதான் கண்ணில் எண்ணெய் ஊற்றி கவனித்தாலும், கையாடலும் களவுமிருக்கத்தான் செய்யும்.

இந்த தவறுகளை - இடர்களைத் தவிர்க்கும் ஏற்பாடுகளில் உள்கட்டுப்பாடு ஒழுங்கு என்று கூறப்படும் ‘Internal Control' முறைமைகளை ஏற்படுத்திக் கொள்வது மிக அவசியம். அந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லையென்றால் ஏமாந்து போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஒன்று  : ரொக்கப் பணம்

கையிருப்பு ஒரு தொகைக்கு மேல் இருக்கக்கூடாது. வியாபாரத்தைப் பொறுத்து, நம்பிக்கைக்குப் பாத்திரமான பணியாளரைக் கொண்டு இதனை நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதல் பணம் கையில் புழுங்கும்போது நல்லவனுக்கும் நாக்கில் எச்சில் ஊறும்.

இரண்டு  : சேதாரம் 

சேதாரம் சில்லரை என்று நம்பினால், சில்லரையே  இலாபத்தை அடித்துச் சென்றுவிடும். “சிறு துளிதான் பெரு வெள்ளம்” என்பது போல், சிறிய சேதாரங்களில்  நோட்டம் விடாமல் விட்டுவிட்டால் நட்டம் நம்மைத்தேடி வரும்.

மூன்று  : கட்டம் கட்டமான சோதனை

ஒருவரிடமே முழுப் பொறுப்பு இருந்தால் அது நிர்வாகக் கோளாறாகக் கருதப்படும். ஒரு கட்டத்திற்கு மேல் இன்னொருவர் – ஒரு மேலாளர், நிர்வாகியின்  அங்கீகாரம் அனுமதி தேவை. அப்போதுதான் பணமும் பொருள்களும் பத்திரமாக இலக்கை அடையும்.

நான்கு : நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை, நம்பகமான பாதுகாப்பான இடத்திலேயே பழுது ஏற்படும். காசோலைப் புத்தகம், ஏன் கம்ப்யூட்டர்கூட களவு போய்விடும். போலிக் கையெழுத்துடன், பதிவு முத்திரையும் அனுமதியின்றி பதியப்படக்கூடும். 

இதனைத் தவிர்க்க சாவிப் பொறுப்பு ஒருவரிடமும் காரியப் பொறுப்பு இன்னொருவரிடமும் இருக்க வேண்டும். 

உள் காண்காணிப்பு, கட்டுப்பாடு நிர்வாகத்தின் ஒரு முக்கிய பங்கு, கையாடல் களவுக்கு இங்கே வழி இல்லை என்பதை அந்த ஏற்பாடு விளம்பரப்படுத்தபட வேண்டும்.
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset