நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கெலாட் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் போட்டி எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்திய விவகாரத்தில் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சாந்தி தாரிவல், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அசோக் கெலாட், அதில் வெற்றி பெற்றால் மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்துக்குப் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதில் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் கலந்துகொள்ளாமல் போட்டி கூட்டத்தை நடத்தினர். சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கெலாட் ஆதரவாளர்களின் நடவடிக்கைக்குக் கடும் அதிருப்தி தெரிவித்த மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாக்கன் ஆகியோர், இந்த விவகாரம் குறித்து சோனியா காந்திக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், கெலாட் ஆதரவாளர்களான மாநில அமைச்சர் சாந்தி தாரிவல், கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, எம்எல்ஏ தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி பரிந்துரைத்தனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தில்லியில் முகாமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset