
செய்திகள் தொழில்நுட்பம்
இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய தூதர் தரன்ஜீத் சிங் சாந்துவை கூகுள் சி.இ.ஓ. சுந்தர பிச்சை நேரில் சந்தித்து இந்தியாவில் அந்த நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன் மூலமாக, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வருகை தந்த முதல் மிகப் பெரும் தொழில்நிறுவனத் தலைவர் என்ற பெருமையை சுந்தர் பிச்சை பெற்றுள்ளார்.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது.
இளைய தலைமுறையினருக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்தியா எண்மமயமாக்கல் (டிஜிட்டல்) திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் இந்திய தூதரை சுந்தர் பிச்சை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு சுந்தர் பிச்சை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் கூகுல் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தூதருடன் சிறப்பான ஆலோசனை நடைபெற்றது.
அதற்காக இந்திய தூதருக்கு நன்றி. இந்தியாவில் எண்மமயமாக்கல் திட்டத்துக்கு கூகுள் தொடர்ந்து ஆதரவளிக்கும்' என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm