நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத்தில் அமைகிறது

அகமதாபாத்:

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத்தில் அமைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து  கையெழுத்திட்டன.

குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேதாந்தா-ஃபாக்ஸ்கான் இணைந்து மேற்கொள்ளும் ரூ. 1.54 லட்சம் கோடி முதலீட்டில், சுமார் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் உள்ளிட்ட வாகனங்கள், கைப்பேசிகள், பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் சிப்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.

மாறாக, இந்த சிப்களுக்காக இறக்குமதியை இந்தியா சார்ந்துள்ளது. உலகில் 8 சதவீத செமிகண்டக்டர் சிப்களை தைவான், சீனா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் உற்பத்தி செய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset