நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கடத்தல்: மரண தண்டனையில் இருந்து தப்பிய இரு ஆடவர்கள்

கோலாலம்பூர்:

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஆடவர்களுக்கு தண்டை குறைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனையானது மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் தற்போது 17 ஆண்டு சிறைவாசமாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறைத்தண்டனை பெற்ற தொழிலதிபரான 45 வயது ஷைஃபுல் அஜீஸி சலிம் (Shaifol Azizi Salim) என்பவர் பத்து பிரம்படிகளைப் பெற வேண்டியிருக்கும்.

குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான சமையல் கலைஞர் ஷுகோர் யாகூப் (55 வயது) பிரம்படியில் இருந்து தப்பினார்.

இரு ஆடவர்களுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

1.3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளை அவர்கள் மலேசியாவுக்கு கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஏழு ஆண்டுகளுக்கு அலோர் ஸ்டாரில் மார்ஃபின் போதைப் பொருள் கடத்தியதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தானது. எனினும் 17 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

அரசுத்தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முன்னிலையானார். தண்டனைக் குறைப்பு என்றால் 18 ஆண்டுகால சிறைவாசம் விதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தண்டனைக் குறைப்புக்கு வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset