செய்திகள் மலேசியா
அதிகாலை சோதனையில் சிக்கிய காதல் ஜோடி: யாபா போதைப்பொருள் பறிமுதல்
டுங்குன்:
178.68 கிராம் அளவிலான யாபா வகை போதைப்பொருள் மாத்திரைகள் வைத்திருந்ததாக, ஒரு ஆண் அவரது காதலியுடன் இன்று அதிகாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
டுங்குன் மாவட்ட காவல் துறைத் தலைவர், சுபரிண்டெண்ட் மைசுரா அப்துல் காதிர் கூறுகையில், ஃபெல்டா கெர்டே, கெட்டெங்கா ஜெயா பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கெட்டெங்கா ஜெயா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரத்தில் சந்தேகமாக நடந்து கொண்டிருந்த அந்த இருவரையும் கவனித்தனர்.
“அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், யாபா வகை போதைப்பொருள் மாத்திரைகள் என சந்தேகிக்கப்படும் 178.68 கிராம் எடையுள்ள மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 13,401 ரிங்கிட் ஆகும்,” என அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக டுங்குன் மாவட்ட காவல் தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சிறுநீர் பரிசோதனையில், 33 வயதுடைய ஆண் சந்தேக நபர் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளுக்கு பயன்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளதுடன், 39 வயதுடைய பெண் சந்தேக நபர் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இருவரும் ஏழு நாட்களுக்கு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 1952-ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டம் பிரிவு 39Bன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் மைசுரா கேட்டுக்கொண்டார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 10:15 pm
தனக்கு மிரட்டல்கள் வந்ததை கிளந்தான் போலிஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
January 2, 2026, 10:12 pm
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
January 2, 2026, 10:11 pm
கம்போங் பாரு கலவரம்: போலிஸ் தலைவரை காயப்படுத்திய குற்றத்தை 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டான்
January 2, 2026, 10:08 pm
ஈப்போவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
January 2, 2026, 5:45 pm
பெற்றோரை வாளால் தாக்கிய மகன்
January 2, 2026, 4:36 pm
கொலை முயற்சி குற்றச்சாட்டு: இல்லத்தரசியும் அவரது ஆண் தோழனும் நீதிமன்றத்தில் ஆஜர்
January 2, 2026, 1:11 pm
