நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை நீதிபதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து விசாரணை: ஐஜிபி தகவல்

கோலாலம்பூர்:

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டுக்கு Tengku Maimun Tuan Mat விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி புக்கிட் அமானின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு காவல்துறை தலைவர் ஐஜிபி அக்ரில் சனி அப்துல்லாஹ் சானி Acryl Sani Abdullah Sani உத்தரவிட்டுள்ளார்.

இந்த மிரட்டல்கள் தொடர்பாக எந்தவிதப் புகாரும் அளிக்கப்படாவிட்டாலும், காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் தொடர்புடைய SRC வழக்கை தலைமை நீதிபதியை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மிரட்டல்கள் இடம்பெற்றுள்ளன.

"இது மிக முக்கியமான, தீவிரமான விவகாரம். எனவேதான், மிரட்டல்கள் குறித்து புகார் அளிக்கவில்லை என்றாலும் காவல்துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது. பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாது.

"எனவேதான் தலைமை நீதிபதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து புக்கிட் அமானின் சிஐடி பிரிவு விசாரித்து வருகிறது," என்றார் ஐஜிபி அக்ரைல் சானி  (Acryl Sani Abdullah Sani.)

தொடர்புடைய செய்திகள்

+ - reset