நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2.3 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி நிதிகள் சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது: நீதிபதி

புத்ராஜெயா:

2.3 பில்லியன் ரிங்கிட்  1 எம்டிபி நிதிகள் சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், 1 எம்டிபி நிதியில் மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 21 பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பெடரல் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேரா இந்த தீர்ப்பை வழங்கினார்.

நஜிப் மீதான 25 குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக அவர் தீர்ப்பளித்தார்.

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை ஜாலான் ராஜா சூலானில் உள்ள AmIslamic Bank Berhad கிளை மூலம் 1 எம்டிபி நிதியிலிருந்து மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற தனது பதவியைப் பயன்படுத்தியதாக 72 வயதான நஜிப் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset