நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எஸ்பிஐ வங்கியில் ரூ. 11 கோடி நாணயங்கள் திருட்டு: 25 இடங்களில் சிபிஐ சோதனை

புது டெல்லி:

ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் திருடப்பட்ட வழக்கில், வங்கி முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தில்லி, ராஜஸ்தானில் மொத்தம் 25 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

கரௌலி மாவட்டம், மெஹந்திபூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நாணயங்கள் இருப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வில் குளறுபடிகள் இருப்பது கடந்த 2021, ஆகஸ்டில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நாணயங்களை முழுமையாக எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது.

வங்கியின் கணக்குப் புத்தகங்களின்படி ரூ.13 கோடி நாணயங்கள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் ரூ.2 கோடி நாணயங்கள் மட்டுமே இருந்ததை தனியார் நிறுவனம் கண்டறிந்தது.

இதுதொடர்பாக வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 பேர் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset