செய்திகள் இந்தியா
3.4 கி.மீ, நீளமான சரக்கு ரயில் : இந்தியா சோதனை
புது டெல்லி:
மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய சூப்பர் வாசுகி சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்)வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, இந்த ரயில் சாதனைப் பயணத்தை மேற்கொண்டது.
இந்த ரயிலில் 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடையிடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டிருந்தன.
"கோர்பா, நாகபுரி இடையிலான 267 கி.மீ. தொலைவை 11.20 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்தது; ஒரே பயணத்தில் சுமார் 9,000 டன் நிலக்கரியை (90 பெட்டிகளில் தலா 100 டன்கள்) எடுத்துச் செல்லும் சரக்கு ரயில்கள்தான் தற்போது உள்ளன.
"சூப்பர் வாசுகி ரயிலின் மூலம் மூன்று மடங்கு அதிக நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியும். 3,000 மெகாவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி ஆலைக்கு ஒரு நாள் முழுக்க தேவையான நிலக்கரியை இந்த ரயிலின் ஒரே பயணத்தின் மூலம் பூர்த்தி செய்துவிடலாம்" என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
