நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

நிறுவனத்தில் முரண்பாடுகள்! அரசியலாக்க வேண்டாம்!- டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

ஓர் இனம், சமுதாயம், ஏன் ஒரு குடும்பம் மற்றும் நிறுவன அமைப்புகளின் அங்கத்தினர்கள் ஒன்றிணைந்து ஒருமுகமாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், நடப்பில் மனித இயல்பில் அவ்வாறு நடைபெறுவது மிக அபூர்வம்.

அதிலும் ஒரு நிறுவனத்தில் பல்லின மொழி கலாசார அடையாளம் கொண்டோர் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். எனவே, ஒரு நேர் கோணப் பார்வையை அத்தகையோரிடம் எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கத் தோன்றும். ஆனால், ஒரு நிறுவனத்தின் குறிக்கோள், இலக்கு போன்றவற்றை வகுத்து அதற்குத்தக்க செயல்பாடுகளை அமைத்து, அந் நிறுவனத்தின் பணியாளர்களை - அங்கத்தினர்களை ஒரு நோக்க சிந்தனைக்கு உட்பட வைப்பதே நிறுவன நிர்வாகத்தின் பெரும் சவால்.

எவ்வளவுதான் முயன்றாலும், முரண்பாடுகள், சண்டை சச்சரவுகளும் நிகழவே செய்யும். அப்படி நேரும்போது அத்தகைய முரண்பாடுகள் நிறுவன அரசியலாக மாறாமல் இருப்பதற்கான சில உபாயங்கள்.

ஒன்று : மனிதருக்கு மனிதர் ஒருவரின் கொள்கை, மனப்பான்மை, மதிப்பு, மதிப்பீடுகள் மாறுபடும்போது, மோதல்கள் உருவாகும். குறிப்பாக ஒரு மேலாளர் மாற்றம், புதிய அணுகுமுறையைக் கொண்டு வரும்

இரண்டு : ஒரு மாற்றம் அல்லது உருமாற்றம் ஏற்படும்போது நடப்பு நடவடிக்கைகள்  மாற்றப்படும். புதிய வேலை அட்டவணை கொடுக்கப்படலாம் இதனால் பாகுபாடுகள் இருக்கின்றன என்ற தப்பபிப்ராயம் ஏற்பட்டு, முரண்பாடுகள் முன்வைக்கப்படும். 

மூன்று : ஊழியர்கள் எல்லாரும் ஒரே சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒரு நிறுவனத்தில் அதன்படி தருவதற்கு சூழ்நிலையும் நிறுவன நிர்வாகக் கொள்கைகளும் இடம் தராது. சலுகைகள் வித்தியாசப்படும்போது, அதனைப் பெறாதவர் கூக்குரலிடுவர். 

நான்கு : நிர்வாகம் சரியான திக்கில் செல்லலாம் 'ஏனோ - தானோ' என்று நிலைத்தன்மையின்றி திசைமாறிப்போனால், குமுறல்கள் கொந்தளிப்பாக மாறும்.

முரண்பாடுகள் எழும்போது, அவற்றை  முதலிலேயே கிள்ளி எறிவது நலம். அதை வளரவிட்டு, நிறுவன அரசியல் உருவாக இடம் தராமல், நிர்வாகம் செய்வதே திறமை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset