நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

பிள்ளைகளை நம்புங்கள்! படிப்பு மற்றும் அனுபவத்தைக் கூட்டுங்கள்! - டத்தோ ஸ்ரீ முஹம்மத் இக்பால் 

“இந்த வீடு வாசல், தொழில் அனைத்தும் உங்களுக்குத்தான்!” என்ற ஆதங்கத்தை பெற்றோர், குறிப்பாக தந்தை கூறுவது அடுத்த தலைமுறை பற்றிய அக்கறையைக் காட்டுகிறது.

இந்த அதீத உணர்வும் எண்ணங்களும் போற்றப்பட வேண்டும். என்றாலும், எண்ணங்கள் மட்டும் போதாது. பிள்ளைகள் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்களை தகுந்தவர்களாக, தராதரம் உள்ளவர்களாக ஆக்குவதே பெற்றோரின் பொறுப்பு.

உயர்ந்து நின்ற வியாபாரங்களும் நிறுவனங்களும் மறைந்துவிட்ட நிலைமையை அலசிப் பார்க்கும்போது, ஒரு கூற்று முன் நிற்கின்றது. அதுதான் அடுத்த தலைமுறையினரின் தகுதி, தராதரம், திறமை போன்றவை போற்றப்படவில்லை; அவற்றை உருவாக்க மெனக்கெடவில்லை என்ற நிதர்சன உண்மை

அதைத் தவிர்க்க சில யோசனைகள்:

ஒன்று  : 'என் நிழலாகத் தொடர்’ என்று பிள்ளையை வியாபாரத்திலும் குடும்ப நிர்வாகத்திலும் வளர்ப்பது. முன்பொரு காலத்தில் இதுதான் வழி என்று ஆதிக்கம் செலுத்தப்பட்டாலும், இன்றைய தொழில்களுக்கும் வியாபார சூழல்களுக்கும் இது ஒத்து வரா! வியாபாரம் தொடர் மாற்றங்களை எதிர்நோக்குகின்றது. அதற்கு ஒருவழி குறுகிய அனுபவம் பயன்படாது.

இரண்டு  : 'படித்துப் பட்டம் பெற்று வா!’ இது இப்போது  பெற்றோர்களின் தாராக மந்திரம். படிப்பின் மீது  அக்கறை காட்ட வேண்டியது கடமை. அதோடு படிப்பு ஒரு அடிப்படைத் தளத்தை அமைத்துத் தருகிறது அதாவது, தொழிலில் ஒரு படி மேலே உயர உறுதுணையாக இருக்கும். ஆனால், படிப்பை மட்டும் நம்பி நடந்தால், ஏட்டுச் சுரக்காய் கதைபோல முடிவுகள் வந்து சேரக் கூடும்.

மூன்று : 'வெளியில் போய் அனுபவம் பெற்று வா!’  என்று பெற்றோர்கள் பிள்ளையை ஒரு சிறந்த நிறுவனத்திலோ அல்லது ஒரு திறமைசாலியிடமோ  அனுப்புவது உண்டு. அனுபவத்தைப் போல சிறந்த படிப்பு இல்லைதான் என்று கூறும் அளவிற்கு அனுபவம் பெற்றவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.

எதிர்கால தலைமுறையினருக்கு மேற்கூறிய மூன்று வழிகளும் தேவை. ஒன்றை மட்டும் மிகைப்படுத்தி மற்றவற்றை விட்டுவிடுவது இழப்பை உண்டாக்கும்.

அதிலும் அதிமுக்கியம், அடுத்த தலைமுறையினரின் ஈடுபாடு. வியாபாரம் தகப்பன் பாணியிலேயே இருந்தால், பிள்ளைகளுக்கு ஈர்ப்பும் பற்றுதலும் உருவாகாது. எனவே, பிள்ளைகள் பொறுப்பிற்கு வருமுன் அவர்கள் எதிர்பார்க்கும் உருமாற்றங்களுக்கு இடமளிப்பது சாலச் சிறந்தது

தொடர்புடைய செய்திகள்

+ - reset