நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

தந்தை சொல்லுக்கு மிக்க மந்திரம் உண்டு! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

“தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை” என்ற முதுமொழியில் ஓர் உண்மை புதைந்திருந்தாலும், தற்கால சூழலிலும், வருங்கால நிலைமைகளில் இதன் தாக்கம் வெகுவாக  குறைந்துவிடும். 

எவ்வளவுதான் பெற்றோர் கவனமாக இருந்து பிள்ளைகளின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று முயன்றாலும், விளைவுகள் வேறு மாதிரியே இருக்கும். வியாபாரத்தில் இத்தகைய எண்ணங்களும் போக்கும் நலம் தரா. அதன் ஒரு சில கூறுகள் இதோ!

ஒன்று : வார்ப்பு

என் பிள்ளை என்னைப் போலவே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஒரே அச்சில் வார்த்தது போன்று பழக்க வழக்கங்களை ஏற்படுத்தித்தரும் பெற்றோர் எதிர்கால இயல்புக் கூறுகளை அறியாது செயல்படுகின்றனர். ஒரே அச்சில் பிள்ளை வளர்ந்தாலும் வியாபாரம் ஒரே வார்ப்பில் தொடர்ந்து இயங்க முடியாது.

இரண்டு : வளர்ப்பு

பிள்ளையை வளர்ப்பது வருங்கால உபயோகத்திற்குத்தக்க இருக்க வேண்டும். அப்பா செய்த அதே வேலையை, அதே இடத்தில் ஒரே மாதிரி செய்யும் பிள்ளையினால் பின்னடைவுதான் ஏற்படும். வீட்டில் அந்த நிலைமை என்றால் வியாபாரத்தில் பாதிப்பு கூடும்.

மூன்று : படிப்பு 

கல்வி முக்கியம் என்று அறியாத சமூகம் ஏதுமில்லை என்று துணிந்து கூறலாம். எனவே, பிள்ளைகள் ஓரளவு படித்துத்தான் இருப்பார்கள். பிள்ளைகள் உயர்கல்வி படிக்க அனுப்பும் பெற்றோர்கள் அதிகரித்து வருகின்றன அதிலும், "வியாபாரத்தை எனக்குப் பிறகு நீதான்  ஆளனும்!” என்ற ஆதங்கத்துடன் தொழில் படிப்புகளைத் தொடர பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்குத் தக்க தங்கள் தொழில்முறைகளை  மாறி வரும் சூழுலுக்குத் தக்கபடி அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை.

நான்கு : படிப்பிற்கும் நடப்பிற்கும் உள்ள இடைவெளி

பயிற்சியை முடித்துக் கொண்டு வியாபாரத்திற்கு வரும் மகன், தான் படித்த படிப்பிற்கும் வியாபார ஸ்தல நடப்பிற்கும் உள்ள பெரிய இடைவெளியைச் சந்திப்பது நிச்சயம். அதனால், தந்தையின் அனுபவ கூற்றும், மகனின் வியூகப் பார்வையும் மோதலை உருவாக்கும்.

எனவே, வார்ப்பு, வளர்ப்பு மற்றும் படிப்பு வழிகளில் வியாபாரத்தை முன்னடத்திச் செல்ல முடியும். தந்தையின் சொல்லிற்கு மரியாதை என்றும் உண்டு. ஆனால், அதுவே ஆதிக்கமானால் வர்த்தகத்தில் பிள்ளைகளுக்கு ஈர்ப்பு இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset