நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

புது டெல்லி:  

இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலர், தனியார் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலர் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும்.

இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.

சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலர் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியார் துறை முதலீடு மூலம் நிரப்ப வளர்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset