நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய பொது பூப்பந்துப் போட்டி: இரண்டாவது சுற்றில் 5 தேசிய போட்டியாளர்கள்

கோலாலம்பூர் - 

மலேசிய பொது பூப்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு 5 தேசிய போட்டியாளர்கள் முன்னேறியுள்ளனர்.

முதல் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மலேசிய பிரதிநிதித்து 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 5 மலேசிய போட்டியாளர்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். எஞ்சிய 8 போட்டியாளர்கள் தோல்வி கண்டு வெளியேறி உள்ளனர்.

மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான கோ சூன் ஹுவாட் - செவோன் லாய், ஆண்கள் இரட்டையர் ஜோடிகளான தான் கியான் மெங், தான் வீ கியோங், ஓங் இயோ சின் - தியோ ஈ வீ,  மகளிர் இரட்டையர் ஜோடியான லோய் யின் யுவான், வராலே சியூ, கோ ஷீ பெய், நூர் இஷானுடின் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset