நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவிதையில் விஸ்வரூபம் எடுத்தவர் கண்ணதாசன்: கண்ணதாசன் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் புகழாரம்

கோவை:

கோயம்புத்தூரில் கண்ணதாசன் கழகம் சார்பில் நடைபெற்ற 14 ஆம் ஆண்டு கண்ணதாசன் விழாவில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் அறிஞர்களுக்கு  விருதுகள் வழங்கி கவுரவித்தார். 

அதன்பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் சரவணன்,  கோவை மாநகரம் சிறந்த இலக்கிய சபை கொண்ட மாநகரம் என்றும், இந்த விழா மரியாதைக்குரிய விழா என்றும் கூறினார். 

மேலும் கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் அவரது பலமும் பலவீனமும் பேசபட்ட நிலையில் அவர் மறைந்த பிறகு அவரை இப்போது அனைவரும் தலையில் வைத்து சுமப்பதாகவும் பேசிய அவர், இன்னும் 20 ஆண்டுகளில் ஒரு சமுதாயத்தின் அடையாளம் மாறி போகப்  போவதாகவும், இந்தக் கடைசி தலைமுறை பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூன்று மிகப் பெரிய கவிஞர்களை பார்த்திருப்பதாகவும், தெரிவித்த அவர், தமிழை சுதந்திரதிற்காக ஆயுதமாக பயண்படுத்தி வந்தேமாதரம் என்ற சொல்லை அனைவரின் நாவிலும் ஒலிக்க செய்தவர் பாரதியார் என்றும், கண்ணதாசன் போல்  முரண்பட்டவர் யாரும் இல்லை என்றார். 

May be an image of 2 people and people standing

May be an image of 2 people and indoor

மேலும் சினிமா கொட்டகைகளை பாடல் ஸ்தலங்களாக  ஆக்கியவர், வெட்கத்திற்கும் நாணத்திற்கும் விளக்கமளித்தவர், ஆசைக்கும் பாசத்திற்கும் விளக்கமளித்தவர் கண்ணதாசன் என புகழாரம் சூட்டினார். 

அதேபோல் தாம்பத்ய உறவை நான்கு வரியில் சொன்னவர், கவிதையில் விஸ்வரூபம் எடுத்தவர் கண்ணதாசன் என புகழ்ந்ததோடு,  " நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் வரை, தாய் மலரை காத்திருப்பேன் " என்ற கண்ணதாசன் 
பாடல் வரிகளை கூறி தாயின் சிறப்பை போற்றும் விதமாக கண்ணதாசனின் சிறந்த எழுத்துக்கள் இது என்றார். 

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி" என்ற மேலும் ஒரு பாடல் வரிகளை கூறி,  இந்த பாடலை கேட்கும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் யாருக்கெல்லாம் கண்ணில் நீர் வழிகிறதோ அவர்கள் எல்லாம் ஒழுக்கமாக மனைவியின் மீது அன்போடு வாழுகிறார்கள், அந்த அளவுக்கு கணவன் மனைவி மீதான பாசத்தை வீரியமாக எழுதியிருப்பார் கண்ணதாசன் என்றார்.  

May be an image of 4 people and people standing

அதோடு மிக சிறந்த அர்த்தமுள்ள கவிவள்ளல் கண்ணதாசன் என்றும் அவருக்கன இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையளிப்பதாகவும் கூறினார்.  

பின்னர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனின் தமிழ் திறன் மற்றும் ஆர்வத்தை பாரட்டும் விதமாகவும், கண்ணதாசன் மீது அவர் வைத்திருந்த பற்றுதல் காரணமாகவும், கண்ணதாசன் வாழ்ந்த சிறுகோடல்பட்டி கிராமத்தில்  கண்ணதாசன் வாழ்ந்த இடம், அவர் சென்ற கோவில், அவர் அமர்ந்து கவிதை எழுதிய இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஒவ்வொரு பிடி மண் எடுத்து வந்து அதனை வெள்ளிக் குவளையில் வைத்து அமைச்சருக்கு பரிசளித்தனர்..

இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர் நூல் ஆசிரியர் மரபின்  மைந்தன் முத்தையா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணகுமார், கண்ணதாசன் கழக பொறுப்பாளர் தேவசீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் வண்ண நிலவன், திரைபட இயக்குநர் வி.சி.குகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்  "கண்ணதாசன் விருதினை" வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset