நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கீழடி அகழ்வாராய்ச்சியை அங்கீகரிக்க அறிவியல் தரவுகள் தேவை: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: 

தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் தேவைப்படுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய  அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,  கீழடி அகழ்வாராய்ச்சியை அங்கீகரிக்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன.

அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியில் இன்னும் அவை நிரூபிக்கப்படவில்லை. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்றார்.

இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலில் ஒன்றிய அரசு கீழடியில் முதலில் ஒன்றும் இல்லை என்று கூறியது, பின்னர்  ஆய்வு அதிகாரி இடமாற்றம், நிதியை ஒதுக்கவில்லை, அறிக்கை சமர்ப்பித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரம் போதுமானதல்ல என்று கூறுகிறார்கள் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset