செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது; மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் ஓர் உதாரணம்: பாமக தலைவர் ராமதாஸ்
சென்னை:
நல்ல செய்தி விரைவில் வரும், ஆனால் எங்கிருந்து வரும்? தோட்டத்திலிருந்து வருமா என்றெல்லாம் தெரியாது. அதுவரை நாம் காத்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்குக் கருணாநிதி ஓர் உதாரணம். மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் ஓர் உதாரணம். என்று பாமக தலைவர் ராமதாஸ் தனது பேட்டியைத் தொடங்கியிருப்பது பல விஷயங்களை அவர் சூசகமாக சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கூட்டணி வைக்கப்போவது தேசிய கட்சியா? மாநில கட்சியா? என்ற கேள்விக்கு கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பதிலளித்திருந்தார். ஆனால் எங்கிருந்து வரும்? தோட்டத்திலிருந்து வருமா? என்றால் தெரியாது என்றார் சிரித்தபடி.
ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, ஆடிட்டர் குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சென்னையிலும் சந்தித்தேன். மோடி எனக்கு நெருங்கிய நண்பர், தேசிய அளவில் தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து 2 அல்லது 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. அமித் ஷாவை இதுவரை நான் சந்தித்தது இல்லை என்று பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தார் ராமதாஸ்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 10:16 am
சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி அவதூறு பிரச்சாரம்: சென்னை மேயா் ஆா்.பிரியா போலீஸில் புகாா்
July 27, 2026, 12:25 pm
தெரு நாய் பிரச்சினையால் திண்டாடும் சென்னை மாநகரம்
July 26, 2026, 6:44 pm
தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம்: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
