
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வக்ஃப் திருத்தச் சட்டம் திரும்ப பெறக் கோரி சென்னையில் கண்டன கூட்டம்
சென்னை:
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தமிழ்நாடு கிளை நடத்திய இந்த கண்டன கூட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலரும், வக்ஃப் மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றவருமான ஆ.ராசா, வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு நிறைவேற்றிவிட்டது.
அதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றார்.
விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், தற்போது மத்தியில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீது சட்டத்தின் பெயரால் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ஹிந்து, கிருஸ்துவர்கள், சீக்கியர்களின் அறக்கட்டளைகளை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதைப்போலவே வக்ஃப் வாரியத்தையும் முஸ்லிம்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என்றார்.
இந்த கண்டன கூட்டத்தில் தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மதிமுக, இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm