
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை:
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஜூன் 10) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், வரும் 11-ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும, 13, 14-ஆம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm