
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வுபெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஐஆர்எஸ் பணியில் இருந்து இவரை மத்திய அரசு விடுவித்தது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அருண்ராஜுக்கு மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ”இவர் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கட்சிக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், அதிமுக, திமுக கட்சிகளின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதி உள்ளிட்ட பலர் தவெகவில் இன்று இணைந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm