
செய்திகள் தமிழ் தொடர்புகள்
'தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை:
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் 'தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள் கொரியா' எனும் நூலை முதல்வர் அவர்களால் வெளியீட்டு சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கொரியா ஆகிய இரு நாடுகளுக்கான தொடர்பு நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சி, மொழி பண்பாடு வரலாறு என பன்முகத்தன்மை கொண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ளது என்பதை தமிழ்நாட்டிற்காண கொரிய தூதர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகத்தில் சந்தித்தபோது தனது கருத்தாக முதல்வரிடம் பகிர்ந்து கொண்டார்.
இதனையே தமிழ் மரபு அறக்கட்டளையும் கடந்த ஏறக்குறைய 20 ஆண்டுகளாக மின்தமிழ் மடலாடர் குழுமத்தில் தொடங்கி இதுவரை நான்கு புத்தகங்களை வெளியிட்டு இந்த ஆய்விற்கு ஓர் அடித்தளத்தை அமைத்தது.
அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் இறுதியில் சென்னை பல்கலைக்கழகம், கொரியா ஹன்குக் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வகையில் ஓர் ஆய்வுக் கருத்தரங்கை கடிகை பிரிவின் வழி நிகழ்த்தினோம்.
அந்த ஆய்வுக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும் கருத்துக்களும் நூலாக தொகுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களால் வெளியீட்டு சிறப்பிக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவர் முனைவர் சுபாஷினி நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
நிகழ்வில் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் திருமிகு முருகானந்தம் இஆ, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm