நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்

லண்டன்: 

குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூட்டம் அவசரமாகக் கூடியது.

அந்தக் கூட்டத்தில், குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த நோய்க்கு கொரோனாவுக்கு இணையான முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், தற்போது குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகள் மட்டுமன்றி மேலும் பல நாடுகளுக்கு அந்த நோய் பரவலாம் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படும்.

மேலும், தற்போது போலியோவை ஒழிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குரங்கு அம்மையை ஒழிப்பதற்கும் அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset