நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து உலகத் தரவரிசைப் பட்டியலில் 147ஆவது இடத்துக்கு முன்னேறியது மலேசியா

கோலாலம்பூர்:

உலகத் தரவரிசைப் பட்டியலில் மலேசிய கால்பந்து அணி ஏழு இடங்கள் முன்னேறி 147ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கிண்ணப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய மலேசிய அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதையடுத்தே உலக காற்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் தர வரிசைப் பட்டியலில் மலேசியா முன்னேற்றம் கண்டது.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் இந்தப் பட்டியலில் மலேசியா 154ஆவது இடத்தி்ல் இருந்தது.
தலைமைப் பயிற்சியாளர் கிம் பான் கோன் வழிகாட்டுதலின் கீழ், மலேசிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இதன் பலனாக கடந்த நாற்பது ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கிண்ண கால்பந்து போட்டிக்கான இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி உள்ளது.

ஜூன் 14ஆம் தேதி புக்கிட் ஜலில் தேசிய அரங்கில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மலேசியா.

இதற்கு முன்பு கடந்த 2007ஆம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டியை நடத்திய நாடு என்ற அடிப்படையில் அதில் பங்கேற்றது மலேசியா அணி. ஆனால் தகுதியின் அடிப்படையில் ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தகுதி பெற்று்ளளது.

இதற்கு முன்பு கடந்த 1980ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்து போட்டியில் விளையாடியது மலேசியா.

தொடர்புடைய செய்திகள்

+ - reset