நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய்: அமைச்சர் எதிர்பார்ப்பு

கோலாலம்பூர்:

சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மலேசியாவுக்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையில் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"தொடக்கத்தில் நடப்பாண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டிருந்தோம். ஆனால், ஆண்டின் பாதியிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.

"ஒருவேளை செப்டம்பர் மாதம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அவ்வாறு நிகழும் பட்சத்தில், இலக்குகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும்," என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, நடப்பாண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மூலம் அரசாங்கம் 6.8 பில்லியன் ரிங்கிட் வருவாயை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் வரை நாட்டிலுள்ள 15 ஆயிரம் சுற்றுலா முகவர்களுக்கு 23.8 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset