நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

நானே எனக்கு நிகரானவன்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

“நானே எனக்கு நிகரானவன்!" இப்படி ஒரு வாக்கியம் உங்கள் ஆளுமையில் இருந்தால் அதைக் கொஞ்சம் மீள் ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் தன் ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர்.

இதை இவரின் குணாதிசயத்தை குறிக்கின்றது என்பதே உண்மை. என்றாலும், வர்த்தகத்தில் ஈடுபடும் போதோ அல்லது சமுதாய உறவுச் சூழல்களிலோ தனிப்பட்ட அந்த ஆளுமைக்கு மெருகூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எழும். இதை ஆளுமை உருமாற்றம் (Personality Transformation) என்று கூறலாம்.

ஒன்று :  

ஒரு பொருளுக்கு ஓர் அடையாளம் - சின்னம் (Brand) உண்டு. அப் பொருளின் மதிப்பு, உபயோகத் தன்மை அனைத்தும் அந்த சின்னத்தில் அடங்கியிருக்கும். நம்பிக்கையுடன் அப் பொருளை சந்தையில் வாங்கலாம். அதில் பழுது ஏதும் இருக்காது.

அப்படி இருந்தால் அதைச் சரி செய்து பயனீட்டாளர்களை திருப்தி செய்ய முடியும். அதேபோல், ஒரு நபருக்கும் தனி அடையாளம் அடைமொழி குறியீடு (Personal Brand) இருக்க வேண்டும்.

இரண்டு :

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட விற்பனைத் தன்மை (unique selling point) இருக்கும்; இருக்க வேண்டும். அதேபோல், ஒரு நபருக்கும் தனித்தன்மை குறியீடு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

"இவரின் வார்த்தைகளில் சுத்தம் இருக்கும் "இவரை நம்பி வியாபாரத்தில் இறங்கலாம்!" போன்ற நம்பிக்கையை வளர்க்கும் பேச்சுகள் ஒருவரின் அடையாளக் குறியீட்டை தூக்கலாகக் கூறும். 

மூன்று :  

தனிக்குறியீடு என்பது என்ன செய்துள்ளோம். என்ன செய்கின்றோம், எப்படிச்  செய்கின்றோம், எதை நோக்கிச் செல்கின்றோம்… என்ற சந்தையின்  (சமூகத்தின்) எதிர்பார்ப்புகளில் இருந்தே சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் . மதிப்புக் கொடுப்பார்கள். இதை விளம்பரத்தினால் பெற முடியாது.

நான்கு :  

நடப்பு இயல்புகளின் வழிவரும் விளம்பரங்களே நன்மை பயக்கும். வீண் விளம்பரத்தின் மூலம் ஆளுமையையும் செல்வாக்கையும் மகசூல் செய்யலாம் என்ற கூற்று சிறிதளவே எடுபடும். அதற்கு நிலைத்  தன்மை கிடையாது.

ஐந்து :  

தனிக் குறியீட்டை வளர்ப்பதில் அக்கறை காட்டும்போதுதான், "என்னால்தான்…” என்ற   வார்த்தையை அப்புறப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.

வியாபார புத்தியில் வியாபார மற்றும் நிறுவன அடையாளம் (corporate brand), பொருள் அடையாளாச் சின்னம் (product brand) எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் ஒருவரின் தனிக் குறியீடு (Personal Brand)  அதை விட முக்கியம். அதில் “நானே எனக்கு நிகரானவன்” என்ற கொள்கைக்கு இடமில்லை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset